Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு!
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு!

Share:

ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.10-

ஒரு மலேசியருடன் வெளிநாட்டுக் கலப்புத் திருமணம் செய்தவர்கள், வெளிநாட்டில் விவாகரத்து பெற்றிருந்தாலும், அதனை மலேசிய நீதிமன்றத்தில் பதிவு செய்ய முடியும் என பினாங்கு உயர் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது. 1976ஆம் ஆண்டு சட்ட சீர்திருத்தச் சட்டம் பிரிவு 31-இன் கீழ், உள்நாட்டில் திருமணம் செய்தவர்களுக்கு உள்ள அதே உரிமைகள் இவர்களுக்கும் உண்டு என நீதிபதி அஸிஸான் அர்ஷாட் கூறியுள்ளார்.

இந்தோனேசியப் பெண்ணுக்கும் அவரது மலேசியக் கணவருக்கும் வெளிநாட்டில் நடந்த விவாகரத்தை இங்கே பதிவு செய்ய அனுமதி கோரிய வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மலேசியாவில் இவ்வாறானக் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News