Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கடும் நடவடிக்கை எடுக்கப்படும், போலிசார் உறுதி
தற்போதைய செய்திகள்

கடும் நடவடிக்கை எடுக்கப்படும், போலிசார் உறுதி

Share:

கடந்த வாரம் வியாழக்கிழமை எல்மினாவில் விழுந்து நொறுங்கிய இலகு ரக விமான விபத்தில் குற்றத்தன்மையில் சதிச்செயல்கள் எதுவும் நடந்து இருப்பதாக கண்டறியப்படுமானால் அந்த விமான விபத்து தொடர்பான புலன் விசாரணையை போலீஸ் துறை தனது கட்டுப்பட்டிற்குள் எடுத்துக்கொள்ளும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தற்போது விமான விபத்து புலனாய்வுப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த விசாரணை முழுமையாக வான் போக்குவரத்து துறையிடமே விடப்பட்டுள்ளது. எனினும் அதில் குற்றத்தன்மை தொடர்பான அம்சங்கள் இருக்குமானால் அந்த விசாரணையை போலீசார் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News