டெங்கில், செப்டம்பர்.10-
நேற்று இரவு எலிட் விரைவுச் சாலை, டெங்கில் ஓய்வுப் பகுதி அருகே தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வர் சிக்கினர்.
பெரோடுவா கார் ஒன்றில் தனது 4 நண்பர்களுடன் வந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கஞ்சா என்ற போதைப் பொருளைப் பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டது.
அதே வேளையில், அவருடன் வந்த மற்ற 4 பெண்களும் போதைப் பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது பரிசோதனையில் உறுதியானது.
இந்நிலையில், ஒருநாளுக்கு முன்னதாக நெகிரி செம்பிலானில் உள்ள தனது வீட்டில், தான் போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக அப்பெண் அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.








