Jan 26, 2026
Thisaigal NewsYouTube
நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை காலத்தை 6 நிமிடங்களாகக் குறைக்கிறது வானிலை ஆய்வு மையம்
தற்போதைய செய்திகள்

நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை காலத்தை 6 நிமிடங்களாகக் குறைக்கிறது வானிலை ஆய்வு மையம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.26-

பேரிடர் தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில், நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கைகளை வழங்கும் காலத்தை 8 நிமிடங்களில் இருந்து 6 நிமிடங்களாகக் குறைக்க மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

நாட்டின் ஆரம்ப கால எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்த, வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தை 82 விழுக்காட்டிலிருந்து 85 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Arthur Joseph Kurup தெரிவித்தார்.

பேரிடர் தயார்நிலையை உறுதிச் செய்ய, வானிலை ஆய்வு மையம் 24 மணி நேரமும் இயங்கி வருவதோடு, கூட்டரசு மற்றும் மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை முகமைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

வானிலை எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்துவதற்காக புதிய ராடார் மற்றும் முன்னறிவிப்புத் திட்டங்கள் உட்பட அரசாங்கம் 242 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. மேலும், தேசிய சுனாமி எச்சரிக்கை அமைப்பை உருவாக்க 13-வது மலேசியத் திட்டத்தின் கீழ் 18 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று Arthur Joseph Kurup குறிப்பிட்டார்.

Related News

நில ஆக்கிரமிப்பு உள்ளது, ஆனால் 'சட்டவிரோதக் கோயில்' என முத்திரை குத்த வேண்டாம்

நில ஆக்கிரமிப்பு உள்ளது, ஆனால் 'சட்டவிரோதக் கோயில்' என முத்திரை குத்த வேண்டாம்

சிகரெட் துண்டை வீசிய இந்தோனேசியருக்கு 300 ரிங்கிட் அபராதம் மற்றும் 6 மணி நேரச் சமூகச் சேவை

சிகரெட் துண்டை வீசிய இந்தோனேசியருக்கு 300 ரிங்கிட் அபராதம் மற்றும் 6 மணி நேரச் சமூகச் சேவை

கடற்படை உயர் அதிகாரி மீதான ஊழல் விசாரணை: 21 வங்கிக் கணக்குகள், விடுதிகள் முடக்கம்

கடற்படை உயர் அதிகாரி மீதான ஊழல் விசாரணை: 21 வங்கிக் கணக்குகள், விடுதிகள் முடக்கம்

சிலாங்கூர் அரசு புக்கிட் தகார் பன்றி பண்ணைத் திட்டத்தை ரத்து செய்தது

சிலாங்கூர் அரசு புக்கிட் தகார் பன்றி பண்ணைத் திட்டத்தை ரத்து செய்தது

மலாக்காவில் களைகட்டும் சீனப் புத்தாண்டு: பாபா நியோன்யா உணவுகளுக்குக் குவியும் மவுசு

மலாக்காவில் களைகட்டும் சீனப் புத்தாண்டு: பாபா நியோன்யா உணவுகளுக்குக் குவியும் மவுசு

சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் 5  ஆயிரம் ரிங்கிட்  பெற்றதாக முன்னாள் ராணுவத் தளபதியின் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டது

சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் 5 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாக முன்னாள் ராணுவத் தளபதியின் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டது