May 4, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிஸ் அரசரின் வெள்ளி விழா கொண்டாட்டம்: 1,00,000 மக்கள் வருகை தருவர் என எதிர்பார்ப்பு
தற்போதைய செய்திகள்

பெர்லிஸ் அரசரின் வெள்ளி விழா கொண்டாட்டம்: 1,00,000 மக்கள் வருகை தருவர் என எதிர்பார்ப்பு

Share:

கோலாலம்பூர், மார்ச்.01-

பெர்லிஸ் அரசர் துவாங்கு சையிட் சிராஜுடின் புத்ரா ஜமாலுலாயில் அவர்களின் 25 ஆண்டு கால வெள்ளி விழா ஆட்சியின் நிறைவு விழா, வரும் ஏப்ரல் மாதம் கோலா பெர்லிஸில் உள்ள Dataran Lok 9 திடலில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், கூட்டரசு அமைச்சர்களுடன் சுமார் 100 ஆயிரம் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று மாநில முதலமைச்சர் அபு பாக்கார் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.

இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 கொப்பரைகளில் சமைக்கப்படும் இறைச்சி விருந்துடன் கூடிய மக்கள் விருந்தும், கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெர்லிஸ் மக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கெடா, கிளந்தான், திரங்கானு, தெற்கு தாய்லாந்து மக்களும் இந்த விழாவில் பங்கேற்க மாநில அரசு அழைப்பு விடுக்கவுள்ளது.

Related News