சபா சுங்கத்துறை, மாநிலத்திற்குள் கடத்த முயற்சிக்கப்பட்ட சுமார் 305.722 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்து பெரிய கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 15 மில்லியனைத் தாண்டுவதாக சபா சுங்க இயக்குனர் டாக்டர் அஹ்மத் தௌஃபிக் சுலைமான் தெரிவித்துள்ளார்.
உளவுத்துறைத் தகவலின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி செப்பாங்கார் துறைமுகத்தில், கிள்ளான் துறைமுகமிலிருந்து வந்த கொள்கலன் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சோதனையில் 15 பெட்டிகளில் மெத்தம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படும் 305.722 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக அஹ்மத் தௌஃபிக் சுலைமான் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணையில், இந்த போதைப்பொருள்கள் “பானப் பொருட்கள்” எனக் குறிப்பிடப்பட்ட சரக்குச் சீட்டு ஆவணங்களின் கீழ் மறைத்து அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.








