கோலாலம்பூர், ஆகஸ்ட்.17-
அண்மையக் காலமாகத் தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங் தலைகீழாக ஏற்றப்பட்டது போன்ற சம்பவங்கள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல், தேசப்பற்றை வெளிப்படுத்த ஜாலூர் கெமிலாங் கொடியை ஏற்ற மக்கள் பயப்பட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவங்கள் குறித்துச் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், பொதுமக்கள் யாரும் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் அன்வார் இப்ராஹிம், இனி இத்தகையச் செயல்களைச் சகித்துக் கொள்ள மாட்டோம் என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








