Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூர் - சிங்கப்பூர் எல்லையில் 3,000 ரிங்கிட் கையூட்டு பெற்ற 4 அதிகாரிகள் கைது!
தற்போதைய செய்திகள்

ஜோகூர் - சிங்கப்பூர் எல்லையில் 3,000 ரிங்கிட் கையூட்டு பெற்ற 4 அதிகாரிகள் கைது!

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.27-

ஜோகூர் - சிங்கப்பூர் எல்லையில் உள்ள சுல்தான் இஸ்கண்டார் குடிநுழைவுத் துறை வளாகத்தில், மோட்டார் சைக்கிள் நுழைவுப் பாதையில் கடமையில் இருந்த நான்கு அமலாக்க அதிகாரிகள் 3,000 ரிங்கிட் கையூட்டு பெற்றதாகச் சந்தேகிக்கப்பட்டு ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தடுப்புக் காவல் ஆணையை ஜோகூர் பாரு உயர் நீதிமன்றத்தின் உதவிப் பதிவாளர் முகமட் இஸாம் முகமட் அலியாஸ் வெளியிட்டார்.

"ஃபிளையிங் பாஸ்போர்ட்” அதாவது சட்டத்திற்குப் புறம்பான கடப்பிதழ் முத்திரை மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இவர்களிடமிருந்து 14 வெளிநாட்டுப் கடப்பிதழ்களும், நான்கு கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் மேலும் பல அதிகாரிகளையும் ஒரு பெரிய கும்பலையும் சம்பந்தப்பட்டதா என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related News