கோலாலம்பூர், ஜனவரி.19-
யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள் மீண்டும் தொடங்கப்படுமா என்பதை அரசாங்கம் நாளை அறிவிக்கவுள்ளது.
கல்வித் தரத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்படும் இம்முடிவானது, மாணவர்களின் தேவைகளையும், முழுமையான மதிப்பீட்டு முறைக்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய்வதாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, விரிவான மதிப்பீட்டிற்கு மாணவர்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதிச் செய்வதே இதன் குறிக்கோள் என்றும் ஃபாட்லீனா குறிப்பிட்டுள்ளார்.
அதன் படி, முழு கற்றல் கட்டமைப்பும் மறுஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் மேம்பாடுகள் செய்யப்படவுள்ளது.
பத்தாண்டு காலத் இத்திட்டமானது, பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளிகளைக் குறைத்து, கல்விக்கான சமமான அணுகலை உறுதிச் செய்வதை நோக்கமாகக் கொண்டது என்றும் ஃபாட்லீனா தெரிவித்துள்ளார்.








