Aug 12, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடகப் பிரபலம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகப் பிரபலம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர், மே.27-

14 வயது பெண்ணுக்கு ஆபாசக் குறுந்தகவல் அனுப்பி, பாலியல் சேட்டைப் புரிந்ததாக நம்பப்படும் சமூக ஊடகப் பிரபலம் ஒருவர், தடுப்புக் காவல் முடிவடைந்த நிலையில் இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிஇஓ பத்து என்ற அந்த சமூக ஊடகப் பிரபலம், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருப்பதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிறார் பாலியல் குற்றத்தடுப்புப் பிரிவின் உதவி இயக்குநர் உதவி கமிஷனர் சித்தி கம்சியா ஹாசான் தெரிவித்தார்.

22 வயதுடைய அந்த நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர் மீதான விசாரணை தொடர்வதாக அவர் மேலும் கூறினார்.

Related News