அப்பாவி பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வரும் கொடூரத் தாக்குதால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மலேசியா, 70 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 50 டன் எடை கொண்ட உணவு, உதவிப் பொருட்களை வழங்கவிருக்கிறது.
OPS IHSAM என்ற பெயரில நன்கொடை இயக்கத்தின் வாயிலாக திரட்டப்பட்டு உதவிப் பொருட்களை எகிப்து வழியாக பாலஸ்தினத்திற்கு மலேசியாஅனுப்பி வைக்கவிருக்கிறது. இந்த உதவிப் பொருட்கள் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி அனுப்பிவைக்கப்படும் என்று பிரதமர் து றையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர்டத்தோ டாக்டர். முகமட் நைம் மொக்தார் தெரிவித்தார்.








