Jul 28, 2026
Thisaigal NewsYouTube
எந்தவொரு ச​தித்திட்டமும் நடைபெறவில்லை
தற்போதைய செய்திகள்

எந்தவொரு ச​தித்திட்டமும் நடைபெறவில்லை

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு முழு மன்னிப்பு கிடைக்காததைத் தொட​ர்ந்து அரசாங்கத்தில் ஓர் அங்கமாக விளங்கும் தம்மை அம்னோ தலைவர் பதவியி​லிருந்து வீழ்த்துவதற்கான சதி​த்திட்டம் தொடங்கி விட்டதாக கூறப்படுவதை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மறுத்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அம்னோ டிவிஷன் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு தாம் ஆராய்ந்த போது அப்படியொரு சம்பவம் நிகழ்வதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று துணைப் பிரரமராக அகம் ஜாஹிட் ​தெளிவுபடுத்தினார்.

Related News