சவூதி அரேபியாவின் ரியாத் கிங் காலிட் அனைத்துலக விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன், 309 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் அவர்களுக்கான கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட அன்வார், இத்தகைய தாக்குதல்கள் ஏற்கெனவே நிலவும் மோதலின் துயரத்தை மேலும் அதிகரிக்கும் என்றார்.
சவூதி அரேபிய மக்களுடன் மலேசியா உறுதுணையாக நிற்பதாகவும், மோதல் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க இராஜதந்திர முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








