Oct 11, 2026
Thisaigal NewsYouTube

விமர்சிக்க உரிமை உண்டு; உண்மைகளை மறுக்கக்கூடாது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விமர்சிக்க உரிமை உண்டு; உண்மைகளை மறுக்கக்கூடாது

மடானி அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முன்பு உண்மைகளைச் சரிபார்க்க வேண்டும் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தியுள்ளார்.

2025ஆம் ஆண்டு மடானி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பாரம்பரிய இசையும் தமிழ்ப் பாரம்பரிய நடனங்களும் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்ப் பண்பாடு இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு ஆதாரங்களின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும் என்றார். விளம்பரப் பெயர்ப்பலகையில் பிழை இருந்தால் அதைத் திருத்தலாம்; ஆனால், அந்தப் பிழையை வைத்து அரசாங்கத்தின் ஒட்டுமொத்த முயற்சிகளையும் நிராகரிப்பது நியாயமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்ச் சமூகத்தின் நலனுக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக் காட்டினார். 2026ஆம் ஆண்டு தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்கு 5 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மித்ரா நிதி 15 கோடி ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியத் தொழில்முனைவோருக்கு உதவ 3 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் பெர்காட் தீபாவளி திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறவில்லை எனத் தெரிவித்த பிகராஷ், அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுவது போலவே, மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துகள் தவறாக இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

உண்மைகளுக்கு முன்னுரிமை அளித்து, ஒவ்வொரு சமூகத்தின் பண்பாட்டையும் மதித்து, மலேசியர்களின் ஒற்றுமையைப் பாதுகாப்பதே முக்கியம் என்றும் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →