Oct 11, 2026
Thisaigal NewsYouTube

ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்: அந்தோணி லோக் வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்: அந்தோணி லோக் வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அரசாங்கத்தின் பொதுப் பதவிகளை இழந்தாலும், ஜசெக. தலைவர்கள் மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், கிராம சமூக நிர்வாகக் குழு உறுப்பினர்களும் உதவி கோரி வரும் மக்களைக் கைவிடக்கூடாது என்ற அவர், மாநில அரசாங்கத்தில் பதவி இல்லாவிட்டாலும் மக்களுக்குச் சேவை செய்ய வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றார்.

மேலும், ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அடித்தளத் தலைவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அரசியல் நிச்சயமற்ற சூழலில் மாநிலத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்பதால், கட்சியை வலுப்படுத்தத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →