Oct 11, 2026
Thisaigal NewsYouTube

சேரி ஓமோடா 5 கார்களின் புதிய பதிவுக்கு தற்காலிகத் தடை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சேரி ஓமோடா 5 கார்களின் புதிய பதிவுக்கு தற்காலிகத் தடை

ஜோகூர் பாருவில் சேரி ஓமோடா 5, காரின் பின்புற அச்சு முழுமையாகக் கழன்று விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தக் கார் மாடலுக்கான வாகன வகை அங்கீகாரத்தைச் சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

தொழில்நுட்ப விசாரணை முடிவடைந்து, பாதுகாப்பு அபாயங்கள் அடையாளம் காணப்படும் வரை, புதிய வாகனப் பதிவுகளும் நிறுத்தப்படும் என ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட கார்களை அடையாளம் கண்டு ஆய்வு செய்வதுடன், பாதுகாப்பு ஆபத்து இருப்பது உறுதிப்படுத்தப்படும் வாகனங்களை மீளப் பெற்று, உரிய திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சேரி மலேசியா நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கார்களின் உற்பத்தி மற்றும் பொருத்தும் பணிகள், தரக் கட்டுப்பாடு, வெல்டிங் இணைப்புகள், உதிரிப்பாகங்களின் பாதுகாப்பு ஆகியவற்றையும் ஆர்டிடி ஆய்வு செய்யும். சாலைப் பயனர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குறைபாடுகள் தொடர்பில் எந்தச் சமரசமும் செய்யப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →