சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் டம்மாம் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள அண்மைய சம்பவங்களில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை என விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், விமானப் போக்குவரத்து பாதிப்பால் அங்கு சிக்கித் தவிக்கும் மலேசியர்களுடன் ரியாத்தில் உள்ள மலேசியத் தூதரகம் தொடர்பில் இருந்து, தேவையான தூதரக உதவிகளை வழங்கி வருகிறது.
சவூதி அரேபியாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள், விமான நிலையங்களுக்குப் புறப்படுவதற்கு முன்பு தங்களின் விமான நிலவரத்தை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் விஸ்மா புத்ரா கேட்டுக் கொண்டுள்ளது.








