கோலாலம்பூர், செப்டம்பர்.30-
அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47 ஆவது ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு அழைப்பு விடுத்து இருக்கும் அரசாங்கம், தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி அவாங் கேட்டுக் கொண்டுள்ளார்.
காஸா தீபகற்பத்தில் அமைதி முயற்சிகள் குறித்து ஆலோசிப்பதற்கு அல்லது விவாதிப்பதற்கு டிரம்ப் அழைக்கப்படுவதற்கு தகுதியானவரா என்று ஹடி அவாங் வினவியுள்ளார்.
அரசு நாடுகள் உட்பட தேர்வு செய்யப்பட்ட சில இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் டிரம்பின் சந்திப்பை இணைக்கும் அதே வேளையில் இஸ்ரேலை இதுவரை ஆதரித்து வந்த மேற்கத்திய கூட்டணியின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படும் டிரம்புடனான கலந்துரையாடலுக்குப் பின்னால் ஏதேனும் நன்மை இருப்பதாகத் தாம் சந்தேகிப்பதாக ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.








