கூட்டரசு மலாயாவில் ஓரிட பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அமைக்கப்பட்ட ஹோம் கார்ட் எனப்படும் ஊர்க்காவல் படையினரில் மிக வயதான முன்னாள் உறுப்பினர் அரிஃபின் மாட் டெரிஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 114. அவரின் மறைவை லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சுபெரிதென்டன் அஸ்லி முஹமாட் நோர் தெரிவித்தார்.
வட்டார மக்களால் தொக்செக் என்று அழைக்கப்பட்ட அந்த முன்னாள் உறுப்பினர் மூப்பின் காரணமாக உயிரிழந்ததாக அரிப்பின் குறிப்பிட்டார். மலாயாவில் கம்யூனீஸ்டுகளை துடைத்தொழிப்பதிலும், ஓரிட மக்களை பாதுகாப்பதிலும் ஊர்க்காவல் படையினர் பிரதான பங்களிப்பை வழங்கினர். தங்களின் சொந்த வேலை நேரம் போக மற்ற நேரங்களில் தன்னார்வ அடிப்படையில் ஊர்க்காவல் படையினர், மக்களின் ஓரிட பாதுகாப்பை உறுதி செய்து வந்தனர்








