ஜோகூர் பாரு, நவம்பர்.27-
தற்பொது பெய்து வரும் கன மழையில் மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா விடுத்துள்ள எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளுமாறு ஜோகூர் மாநில மக்களை மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக, செகமாட் மற்றும் தங்காக் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் முதன்மையாக கவனத்தில் கொள்ளுமாறு மந்திரி பெசார் வலியுறுத்தியுள்ளார்.
நிலைமையை அணுக்கமாகக் கண்காணிப்பதற்கு ஜோகூர் மாநில அரசாங்கம், பேரிடர் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்புடைய இதர அரசாங்க ஏஜென்சிகளுடன் ஒத்துழைத்து வருவதுடன் எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது என்று டத்தோ ஓன் ஹாஃபிஸ் குறிப்பிட்டார்.
வானிலை மோசடையும் நிலை ஏற்படுமானால் உடனடி உதவியை முடுக்கி விடுவதற்கு ஜோகூர் அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்தார்.








