Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கே.லலித்தா மீதான அவதூறு வழக்கை நிறுத்திக்கொண்டார் ஆசாம் பாக்கி
தற்போதைய செய்திகள்

கே.லலித்தா மீதான அவதூறு வழக்கை நிறுத்திக்கொண்டார் ஆசாம் பாக்கி

Share:

C4 எனப்படும் ஊழலை எதிர்த்து போராடும் அமைப்பின் மூத்த ஆய்வாளர் கே.லலித்தா-வுக்கு எதிராக, 10 மில்லியன் ரிங்கிட் கோரி தொடுத்திருந்த அவதூறு வழக்கை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம்-மின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசாம் பாக்கி நிறுத்திக்கொண்டார்.

INDEPENDENT NEWS SERVICE - INS எனப்படும் இணைய செய்திதளம் ஒன்றில், பங்கு கொள்முதல் குறித்து, கே.லலித்தா தமக்கு எதிராக வெளியிட்டிருந்த செய்தி கட்டுரைகள் தொடர்பில், ஆசாம் பாக்கி கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அவ்வழக்கைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், இம்மாதம் 11ஆம் தேதியிடப்பட்ட நோட்டிஸில், இரு தரப்பின் ஒப்புதல் இல்லாமல், அவ்வழக்கை தாம் நிறுத்திக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கின் செலவு மீதான உத்தரவு இன்றியும் மீண்டும் அவ்வழக்கை பதிவதற்கான சுதந்திரம் இன்றியும் அவ்வழக்கை நிறுத்திக்கொள்வதாகவும் அந்த நோட்டிஸில் குறிப்பிடபட்டுள்ளது.

முன்னதாக, இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற அவ்வழக்கின் நிர்வகிப்பின் போது, நீதிபதி டத்தோ அக்தர் தாஹிர் முன்னிலையில் அவ்விவகாரம் தெரிவிக்கப்பட்டது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்