Nov 11, 2026
Thisaigal NewsYouTube

மானியமில்லா எரிபொருள் விலைகள் குறைந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மானியமில்லா எரிபொருள் விலைகள் குறைந்தது

மானியமில்லா பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளை முதல் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 சென் குறைந்து 3 ரிங்கிட் 87 சென்னாகவும், ரோன்97 பெட்ரோல் விலை 50 சென் குறைந்து 4 ரிங்கிட் 20 சென்னாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மானியமில்லா டீசல் விலை 25 சென் குறைந்து 4 ரிங்கிட் 87 சென்னாக விற்பனை செய்யப்படும்.

இதற்கிடையில், புடி95 திட்டத்தின் கீழ் ரோன்95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென் என்ற விலையிலும், புடி டீசல் திட்டத்தின் கீழ் டீசல் 2 ரிங்கிட் 10 சென் என்ற விலையிலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →