Nov 11, 2026
Thisaigal NewsYouTube

நஜிப்புக்கு வீட்டுக் காவல்; குடும்பத்தினருடன் தங்க அனுமதியில்லை எனத் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப்புக்கு வீட்டுக் காவல்; குடும்பத்தினருடன் தங்க அனுமதியில்லை எனத் தகவல்

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரஸாக், வீட்டுக் காவலில் எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிக்கும் காலத்தில், அவரது குடும்பத்தினர் அவருடன் ஒரே வீட்டில் தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அம்னோ மகளிர் பிரிவு செயற்குழு உறுப்பினர் டத்தோ நுருல்ஹிடாயா அஹ்மாட் ஸாஹிட் இதனைத் தெரிவித்துள்ளார்.

நஜிப்பின் மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், அந்தக் காலகட்டத்தில் பெவிலியன் பகுதியில் உள்ள தமது இல்லத்தில் தங்கியிருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாலான் லங்காக், டூத்தாவில் உள்ள நஜிப்பின் இல்லம் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கும் சிறைச்சாலை விதிமுறைகளே பின்பற்றப்படும் என்றார்.

குடும்பத்தினர் அவரைச் சந்திக்க விரும்பினால், சிறைச்சாலைகளில் நடைமுறையில் உள்ளதைப் போன்றே நிர்ணயிக்கப்பட்ட சந்திப்பு நேரத்தையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →