Nov 11, 2026
Thisaigal NewsYouTube

நஜிப்பின் வீட்டுக் காவல் நிபந்தனைகள் நாளை வெளியிடப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப்பின் வீட்டுக் காவல் நிபந்தனைகள் நாளை வெளியிடப்படும்

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரஸாக் வீட்டுக் காவலில் எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்கான நிபந்தனைகள் குறித்த விவரங்கள் நாளை நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் நாளை மக்களவைக் கூட்டத் தொடரில் பதிலளிக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், நேற்று இரவு 9.27 மணியளவில் நஜிப், கோலாலம்பூர் ஜாலான் லங்காக் டூத்தாவில் உள்ள தமது இல்லத்தைச் சென்றடைந்தார்.

முன்னதாக, உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்லாம் ஸைனுடின், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் நஜிப்புக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை, 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதித்து புதிய உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கிய நிபந்தனை அடிப்படையிலான அரச மன்னிப்பு உத்தரவுக்கு இணங்க இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →