Nov 11, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூர் நெடுஞ்சாலையில் வேன் – பேருந்து மோதல்; நால்வர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூர் நெடுஞ்சாலையில் வேன் – பேருந்து மோதல்; நால்வர் காயம்

ஜோகூர் பாருவில், கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்த தொழிலாளர் பேருந்தின் மீது தொழிற்சாலை வேன் மோதியதில் நான்கு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை 4.45 மணியளவில், இடிஎல் நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 0.2 பகுதியில் இவ்விபத்து நிகழ்ந்தது.

சிங்கப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த 28 வயதுடைய மலேசியர் ஓட்டிய வேனில், மேலும் மூன்று தொழிலாளர்கள் பயணம் செய்துள்ளனர்.

வலதுபுறப் பாதையில் பழுதாகி நின்றிருந்த பேருந்தை வேன் ஓட்டுநர் கவனிக்கத் தவறியதால், அதன் பின்புறத்தில் வேன் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வேன் ஓட்டுநரின் உடல் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மற்ற மூவருக்கும் தலையில் காயங்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுவதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ருல் ஹிஷாம் முஹமட் ஷாஃபி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →