சிறைச்சாலைகளுக்கு தேவையான துணி விநியோக குத்தகை தொடர்பான நிர்வாகத்தில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் குற்றச்சாட்டை சிறைச்சாலை இலாகா இன்று மறுத்துள்ளது. சிறைச்சாலைகள் தொடர்புடைய அனைத்து குத்தகைகளும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப மின் டெண்டர் முறையில் மட்டுமே விடப்படுகிறது. குத்தகைக்கான வெளிப்படைத் தன்மையை காக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறைக்கான குத்தகை விவகாரத்தில் ல் உள்துறை அமைச்சர் சைபுடின் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று சிறைச்சாலை இலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


