Dec 5, 2025
Thisaigal NewsYouTube
நீர்த் தொட்டி அருகில் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

நீர்த் தொட்டி அருகில் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

Share:

கேமரன் மலை, ஜூலை.18-

கேமரன் மலை, பிரிஞ்சாங் அருகில் கம்போங் மெலாயு டேசா கயாஙானில் ஒரு நீர்த் தொட்டி அருகில் புதியதாகப் பிறந்த ஆண் குழந்தை ஒன்றின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீர்த் தொட்டி அருகில் குழித் தோண்டியதைப் போல் மண் கிளறப்பட்டு கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், அந்த இடத்தை தோண்டிப் பார்த்த போது குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டிருப்பது அம்பலமானதாக கேமரன் மலை போலீஸ் தலைவர் அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு குழந்தையின் சடலத்தைப் புதைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட , மண்வெட்டி இதர உபகரணங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த இளைஞர் தனது வளர்ப்பு அக்காளுடன் கொண்ட தகாத உறவினால் பிறந்த குழந்தையை மறைப்பதற்கு அதனைப் புதைத்து இருப்பதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அஸ்ரி ரம்லி குறிப்பிட்டார்.

Related News