Dec 5, 2025
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் சோதனையின் போது சந்தேக நபர் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பணத்தைத் தீயிட்டுக் கொளுத்தினார்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் சோதனையின் போது சந்தேக நபர் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பணத்தைத் தீயிட்டுக் கொளுத்தினார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.19-

தரவு மையக் கட்டுமானம் திட்டம் தொடர்பான டெண்டரில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர், ஆதாரங்களை அழிக்கக் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணத்தை தீயிட்டுக் கொளுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை சந்தேக நபரின் வீட்டில் எஸ்பிஆர்எம் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, ஒரு முன்னணி கட்டுமான நிறுவனத்தின் திட்ட மேலாளர், அதிர்ச்சி அடைந்ததுடன் பீதியில் மூழ்கினார்.

அந்த அதிர்ச்சியில் தன் வீட்டில் இருந்த கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரொக்கப் பணத்தைத் தீயிட்டுக் கொளுத்த முயற்சி செய்ததாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த வீட்டில் ஒரு மூட்டையில் ரொக்கப் பணம் இருப்பதை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 100 ரிங்கிட் கட்டுகளாக இருந்த அந்தப் பணத்தைக் கைப்பற்றுவதற்கு எஸ்பிஆர்எம் தயாரான வேளையில் அந்தப் பணத்தை அதிர்ச்சியில் பார்ப்பதைப் போல் பார்த்த அந்த மேலாளர், கண் இமைக்கும் நேரத்தில் அந்த பண மூட்டைக்குத் தீயிட்டுள்ளார்.
தற்போது அந்த நபர் தடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News