Mar 26, 2026
Thisaigal NewsYouTube
உணவகத்தில் ஆடவர் சுடப்பட்டார், ஆசாமிக்கு வலை வீச்சு
தற்போதைய செய்திகள்

உணவகத்தில் ஆடவர் சுடப்பட்டார், ஆசாமிக்கு வலை வீச்சு

Share:

ஷா ஆலம், ஆகஸ்ட் 26-

கிள்ளான், பந்தர் புக்கிட் டிங்கி, லெபுஹ் பத்து நிலம்- மில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 45 வயது ஆடவர் ஒருவர் காயம் அடைந்தார்.

அந்த ஆடவரின் இடுப்பின் இடது பகுதியில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து, கிள்ளான், Tengku Ampuan Rahimah மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் நிலை சீராக உள்ளது என்று தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்று தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் Cha Hoong Fong தெரிவித்தார்.

வெள்ளைநிற வாகனத்தில் வந்த ஆசாமி ஒருவர், சம்பந்தப்பட்ட ஆடவரை நோக்கி, பல முறை சுட்டதாக விசாணையில் தெரியவந்ததுள்ளது. வெளியேற்றப்பட்ட தோட்டாக்களின் சிதறல்கள் ஆங்காங்கு கிடந்ததாக Cha Hoong Fong கூறினார்.

அந்த உணவகனத்தின் வெளிவளாகத்தில் வாடிக்கையாளர்களுடன் அந்த ஆடவர் அமர்ந்திருந்த வேளையில் இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது.

சம்பந்தப்பட்ட ஆசாமியின் துப்பாக்கியிலிருந்து 6 தோட்டாக்கள் வெளியேறியுள்ளன. அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக Cha Hoong Fong மேலும் கூறினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு