Sep 5, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் கடும் தீ: கடலோரத்தில் 10 மரக் கட்டிடங்கள் தீக்கிரையாகின
தற்போதைய செய்திகள்

பினாங்கில் கடும் தீ: கடலோரத்தில் 10 மரக் கட்டிடங்கள் தீக்கிரையாகின

Share:

பினாங்கில் சியூஜெட்டியிலிருந்து 50 மீட்டருக்கும் குறைவான தொலைவில் அமைந்திருந்த 10 மரக் கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இன்று சனிக்கிழமை அதிகாலை சுமார் 1 மணியளவில் அங்கிருந்த பெட்ரோல் நிலையத்தின் பின்புறம் இத்தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தீ வேகமாகப் பரவியதில் அதன் அருகிலிருந்த மறுசுழற்சி மையம் மற்றும் கார் பழுதுபார்ப்பு நிலையமும் தீப்பற்றின.

அங்கு பலமுறை வெடிப்புச் சத்தங்கள் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

இதனையடுத்து, தீயை அணைக்க தீவிலும், நிலப்பகுதியிலும் இருந்து ஐந்திற்கும் மேற்பட்ட தன்னார்வ தீயணைப்புக் குழுக்கள் விரைந்தன.

எனினும், குறைந்த நீர் அழுத்தம் காரணமாக மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தீவிபத்தால் ஏற்பட்ட சேதத்தின் முழு மதிப்பு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

Related News

மீட்புப் பணிகளுக்காக நேபாளத்திற்குப் புறப்பட்டது மலேசியாவின் 'SMART' குழு

மீட்புப் பணிகளுக்காக நேபாளத்திற்குப் புறப்பட்டது மலேசியாவின் 'SMART' குழு

போலி அரசு ஆணைகள் மூலம் 3 மோசடி முயற்சிகள்: கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை எச்சரிக்கை

போலி அரசு ஆணைகள் மூலம் 3 மோசடி முயற்சிகள்: கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை எச்சரிக்கை

குடிநுழைவுத் துறை வாகன விபத்து: விதிமீறல்கள் குறித்து உள்விசாரணை

குடிநுழைவுத் துறை வாகன விபத்து: விதிமீறல்கள் குறித்து உள்விசாரணை

ஆயுதம், தற்காப்புத் துறையில் மானியம் பெற்றுத்தர 30 ஆயிரம் லஞ்சம்: ஆலோசனை நிறுவன உரிமையாளர் கைது

ஆயுதம், தற்காப்புத் துறையில் மானியம் பெற்றுத்தர 30 ஆயிரம் லஞ்சம்: ஆலோசனை நிறுவன உரிமையாளர் கைது

ஈப்போவில் கும்பல் வெறிச்செயல்: ஓட ஓட வெட்டப்பட்ட நபர் படுகாயம்; 11 பேர் கைது

ஈப்போவில் கும்பல் வெறிச்செயல்: ஓட ஓட வெட்டப்பட்ட நபர் படுகாயம்; 11 பேர் கைது

ஜாலூர் கெமிலாங்கை ஏற்றும் முன் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்  - மலேசியர்களுக்கு தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு அறிவுத்தல்

ஜாலூர் கெமிலாங்கை ஏற்றும் முன் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் - மலேசியர்களுக்கு தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு அறிவுத்தல்