JAS WPKL எனப்படும் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச சுற்றுச்சூழல் துறையின் பெயர், சின்னம் மற்றும் அதிகாரிகளின் அடையாளங்களை தவறாகப் பயன்படுத்தி போலி அரசாங்க உத்தரவு ஆவணங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட 3 மோசடி முயற்சிகள் அம்பலமாகியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி அரசாங்க கொள்முதல் முறையில் பதிவு செய்யப்பட்ட முக்குளிப்பு உபகரண விநியோக நிறுவனம் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது.
JAS சின்னத்துடன் கூடிய சந்தேகத்திற்குரிய ஆவணத்தில் 26 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான கொள்முதல் ஆணை இடம்பெற்றிருந்தது.
பின்னர் மற்றொரு நிறுவனத்துக்கும் 1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில், அதே ஆவண எண்ணைப் பயன்படுத்தி சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான போலி ஆணை வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, JAS WPKL, நேற்று செப்டம்பர் 4-ஆம் தேதி போலீசில் புகார் அளித்ததுடன், தலைமையக நிதிப் பிரிவுக்கும் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போலி ஆவணங்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்து, மோசடி மற்றும் ஆள்மாறாட்டத்தைத் தவிர்க்க பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியுள்ளது.








