Sep 5, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் கும்பல் வெறிச்செயல்: ஓட ஓட வெட்டப்பட்ட நபர் படுகாயம்; 11 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் கும்பல் வெறிச்செயல்: ஓட ஓட வெட்டப்பட்ட நபர் படுகாயம்; 11 பேர் கைது

Share:

பேராக் மாநிலம், ஈப்போ, தாமான் பெங்காலான் ஜெயாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கும்பல் தாக்குதல் தொடர்பாக 11 உள்ளூர் ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இத்தாக்குதலில் 26 வயது ஆடவர் படுகாயமடைந்தார்.

செப்டம்பர் 1-ஆம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில் இரண்டு கார்களில் வந்த 5 பேர் அவரை விரட்டிச் சென்று தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க அந்த நபர் கிந்தா ஆற்றில் குதித்த போதும், சந்தேக நபர் ஒருவர் வெட்டுக்கத்தியால் வெட்டியதில் முகம், கைகள், கால்கள் மற்றும் முதுகில் காயமடைந்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 முதல் 41 வயதுக்குட்பட்ட 11 பேருக்கும் போதைப்பொருள் மற்றும் வன்முறைக் குற்றங்கள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பழிவாங்கும் நோக்கத்திலும், குண்டர் கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவும் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 326-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

மீட்புப் பணிகளுக்காக நேபாளத்திற்குப் புறப்பட்டது மலேசியாவின் 'SMART' குழு

மீட்புப் பணிகளுக்காக நேபாளத்திற்குப் புறப்பட்டது மலேசியாவின் 'SMART' குழு

பினாங்கில் கடும் தீ: கடலோரத்தில் 10 மரக் கட்டிடங்கள் தீக்கிரையாகின

பினாங்கில் கடும் தீ: கடலோரத்தில் 10 மரக் கட்டிடங்கள் தீக்கிரையாகின

போலி அரசு ஆணைகள் மூலம் 3 மோசடி முயற்சிகள்: கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை எச்சரிக்கை

போலி அரசு ஆணைகள் மூலம் 3 மோசடி முயற்சிகள்: கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை எச்சரிக்கை

குடிநுழைவுத் துறை வாகன விபத்து: விதிமீறல்கள் குறித்து உள்விசாரணை

குடிநுழைவுத் துறை வாகன விபத்து: விதிமீறல்கள் குறித்து உள்விசாரணை

ஆயுதம், தற்காப்புத் துறையில் மானியம் பெற்றுத்தர 30 ஆயிரம் லஞ்சம்: ஆலோசனை நிறுவன உரிமையாளர் கைது

ஆயுதம், தற்காப்புத் துறையில் மானியம் பெற்றுத்தர 30 ஆயிரம் லஞ்சம்: ஆலோசனை நிறுவன உரிமையாளர் கைது

ஜாலூர் கெமிலாங்கை ஏற்றும் முன் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்  - மலேசியர்களுக்கு தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு அறிவுத்தல்

ஜாலூர் கெமிலாங்கை ஏற்றும் முன் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் - மலேசியர்களுக்கு தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு அறிவுத்தல்