Sep 25, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதமாக சபாவிற்குள் நுழைந்ததாக ஜெர்மன் நாட்டவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக சபாவிற்குள் நுழைந்ததாக ஜெர்மன் நாட்டவர் மீது குற்றச்சாட்டு

Share:

சபா மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததுடன், குடிநுழைவு அதிகாரி ஒருவரின் கடமையை நிறைவேற்றுவதில் தடையாக இருந்ததாகக் கூறி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது கோத்தா கினபாலு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பாளரின் உதவி வழங்கப்பட்ட போதிலும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அந்நபர் தெரிவித்ததால், அவரிடமிருந்து ஒப்புதலையோ, மறுப்பையோ நீதிமன்றத்தால் பதிவு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், தனது சார்பில் ஆஜராக வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முறையான ஆவணங்கள் இன்றி சபாவிற்குள் நுழைந்ததாக, குடிநுழைவு சட்டம் 1959/63-இன் பிரிவு 6(1)(c)-இன் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்