Sep 23, 2026
Thisaigal NewsYouTube
நஜிப்பிற்கு இதய அறுவை சிகிச்சை தேவையில்லை; மருந்து மூலம் குணப்படுத்தலாம் என வழக்கறிஞர்கள் தகவல்
தற்போதைய செய்திகள்

நஜிப்பிற்கு இதய அறுவை சிகிச்சை தேவையில்லை; மருந்து மூலம் குணப்படுத்தலாம் என வழக்கறிஞர்கள் தகவல்

Share:

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு இதய அறுவை சிகிச்சை அல்லது ஸ்டென்ட் பொருத்தத் தேவையில்லை என்றும், அவரது இதய அடைப்பை மருந்து மூலமே குணப்படுத்த முடியும் என்றும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் அவருக்கு 95 விழுக்காடு அறுவை சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் கணித்திருந்தனர்.

இருப்பினும், இன்று மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்குப் பிறகு, அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும், தொடர் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் மருந்துகள் மூலமே இதனைச் சரிசெய்ய முடியும் என்றும் நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.

தற்போது 72 வயதாகும் நஜிப் ரசாக், எஸ்சிஆர் இன்டர்நேஷனல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

Related News