Sep 23, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் நடக்கும் பகடிவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு
தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் நடக்கும் பகடிவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

Share:

பள்ளிகளில் நடைபெறும் மாணவர் பகடிவதை சம்பவங்களைச் கல்விக் கழகங்களின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் தீவிரமாக அணுக வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளியின் நற்பெயரைக் காப்பாற்றுவதை விட, மாணவர்களின் நலன் மற்றும் ஒழுக்க மேம்பாட்டிற்கே கல்விச் சீர்திருத்தத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பினாங்கு, புக்கிட் மெர்தாஜம், எஸ்.எம்.கே.ஏ. ஷேக் தாஹிர் ஜலாலுதீன் பள்ளியின் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் , பள்ளியின் மதிப்பைத் தக்கவைப்பதற்காக இத்தகைய சம்பவங்களை மறைக்கக் கூடாது என அறிவுறுத்தினார்.

உண்மையான கல்விச் சீர்திருத்தம் என்பது வெறும் கல்விச் சாதனைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் நின்றுவிடாமல், மாணவர்களிடையே நேர்மை, ஒழுக்கம் மற்றும் இரக்கக் குணத்தை வளர்ப்பதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் உறுதிபடத் தெரிவித்தார்.

Related News