கூச்சிங், ஜூலை.21-
பட்டறையில் காரின் அடியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு இருந்த பணியாளர் ஒருவர் எதிர்பாராத விதமாகக் கார், தனது ஆதாரத்தை இழந்து, சரிந்து விழுந்ததில் பரிதாபமாக மாண்டார்.
காரின் உடலமைப்பு, அந்த நபரை நசுக்கியதன் விளைவாக 22 வயதுடைய அந்தப் பணியாளர் சம்பவ இடத்திலேயே மாண்டார். இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் சரவாக், மீரியில் நிகழ்ந்தது என்று தீயணைப்பு, மீட்புப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.








