Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஏழை மக்களுக்கான சும்பாங்ஙான் அசாஸ் ரஹ்மா  உதவித் தொகை  திங்கட்கிழமை முதல் வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

ஏழை மக்களுக்கான சும்பாங்ஙான் அசாஸ் ரஹ்மா உதவித் தொகை திங்கட்கிழமை முதல் வழங்கப்படும்

Share:

உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கான சும்பாங்ஙான் அசாஸ் ரஹ்மா உதவித் தொகை, தகுதி பெற்ற பெறுநர்களுக்கு வரும் ஜனவரி 22 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

SARA என்று சுருங்க அழைக்கப்படும்சும்பாங்ஙான் அசாஸ் ரஹ்மா உதவித் திட்டத்தில் தலா ஒரு குடும்பத்திற்கு அல்லது தனித்து வாழும் மூத்த குடிமக்களுக்கு தலா 100 வெள்ளியும், திருமணம் ஆகாதவர்களுக்கு தலா 50 வெள்ளியும் மாதம் தோறும் வழங்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. .

குறிப்பாக, தலா ஒரு குடும்பத்திற்கு அல்லது திருமணம் ஆகாத மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டுக்கு தலா 600 வெள்ளித் தொகை, தற்போது 1,200 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில் திருமணம் ஆகாதவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டுக்கு தலா 600 வெள்ளி தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த உதவித் திட்டத்தின் மூலம் இலக்குக்கு உரிய மக்கள் பயன்பெறும் பொருட்டு 7 லட்சம் மலேசியர்களுக்காக 70 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த SARA உதவித் திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பயன்பெற்றனர். இதற்காக 13 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த உதவித் தொகை தீபகற்ப மலேசியாவில் உள்ள மக்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் வேளையில் , சபா சரவா மக்கள் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் இந்த உதவித் தொகையை பெறுவர் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்