போலீசாரின் உத்தரவையும் மீறி பினாங்கு, கெப்பாளா பாத்தாஸில் 200 பேருக்குத் தலைமையேற்று ஒரு கடையின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணைக்கு அஞ்சப் போவதில்லை என்று சவால் விட்ட அந்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் இன்று கோலாலம்பூர் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தில் விசாரணையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளார்.
தாம் போலீஸ் விசாணைக்கு அழைக்கப்பட்டு இருப்பதை அக்மால் உறுதிப்படுத்தினார்.
கெப்பாளா பத்தாஸில் கடைக்காரர் ஒருவர் தேசியக் கொடியைத் தலைகீழாகக் கட்டினார் என்பதற்காக சுமார் 200 பேருடன் அந்தக் கடையின் வளாகத்திற்கு நேற்று சென்ற அக்மால், ஊர்வலமாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அக்மாலின் இந்த தன்மூப்பான நடவடிக்கையை எதிர்த்து போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு வருகின்றன.








