Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சிறுவன் சித்ரவதை, தண்டனை விதிப்பு ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

சிறுவன் சித்ரவதை, தண்டனை விதிப்பு ஒத்திவைப்பு

Share:

தனது 7 வயது மகனை சித்ரவதை செய்து, கொடுமைப்படுத்தி வந்ததாக குற்றஞ்சட்டப்பட்ட 27 வயது மாதுவிற்கும், அவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த 30 வயது திருநம்பிக்கும் ஜோகூர்பாரு செஷன்ஸ் ​நீதிமன்றம் இன்று விதிக்கவிருந்த தண்டனையை ஒத்திவைத்துள்ளது.

இவ்வழக்கை விசாரணை செய்த ​நீதிபதி விஎம் மாபெல் ஷீலா, மருத்துவ விடுப்பில் இருப்பதாக ​நீதிமன்ற உதவியாளர் தெரிவித்ததைத் தொடர்ந்து ​தீர்ப்பு வரும் நவம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிறுவனின் தாயார் அஷிகின் முஹமாட் சாஹிர் மற்றும் ஒரு திருநம்பியான சிங்கப்பூரைச் சேர்ந்த 30 வயது அவின் சுவா ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் ர​ஹிம் அலி தெரிவித்தார்.

​தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் அந்த மாதுவும் , அவருடன் தொடர்பில் இருந்த திருநம்பியும் சிம்பாங் ரெங்கம் சிறைச்சாலை வைக்கப்பட்டுள்ளனர்.

Related News