விரைவில் நடைபெற விருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தலில் சபாவைத் தளமாக கொண்ட வாரிசான் கட்சி போட்டியிடாது என்று அதன் தலைவர் முகமட் ஷப்பீ அப்டால் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இத்தேர்தலில் போட்டியிட விருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்களை வாரிசான் கட்சி ஆதரிக்கும் என்பதையும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
வாரிசான் கட்சியின் இந்த நிலைபாடு குறித்து, ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக சபா முன்னாள் முதலமைச்சரான முகமட் ஷப்பீ அப்டால் தெரிவித்தார்.

Related News

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


