குவாந்தான், செப்டம்பர்.30-
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, போலி முதலீட்டுத் திட்டத்தில் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் மோசடிக் கும்பலிடம் இழந்துள்ளார்.
51 வயதான அப்பெண்ணுக்கு, முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, மர்ம நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, அவர் செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில், அச்செயலி மூலமாக, மறைந்த தனது கணவரின் சேமிப்பு நிதி உட்பட, சுமார் 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல், மர்ம நபர் கொடுத்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளதாக பஹாங் காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதைத் தாமதமாக உணர்ந்த அப்பெண் போலீசாரின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








