மனைவியுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டு, விரக்தியினால் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்று எண்ணி சாலையோரத்தில் 12 மீட்டர் உயரத்தில் உள்ள விளம்பரப்பலகை கட்டமைப்பில் ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளவிருந்த ஓர் ஆடவர் தீயணைப்புப்படையினரால் மீட்கப்பட்டார். இச்சம்பவம் இன்று காலை 8.20 மணியளவில் சிலாங்கூர், சுங்கை பூலோ, புன்சா பெஸ்தாரி யில் நிகழ்ந்தது.
விளம்பரப்பலகை கட்டமைப்பின் மீது ஏறி, கூச்சலிட்டுக் கொண்டு இருந்த அந்த ஆடவரின் செயலைப் பார்த்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக தீயணைப்பு, மீட்புப்படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. ஐவர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த ஆடவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அந்த ஆடவரின் மனைவி மற்றும் உறவினர்கள் அவ்விடத்திற்கு விரைந்து வந்து, கீழே இறங்கும்படி பேச்சுக்கொடுத்துக் கொண்டே அவரை சமாதானப்படுத்தினர்.
அதன் பின்னர் மனம் மாறிய அந்த ஆடவர், தற்கொலை எண்ணத்தை கைவிட்டார். இதனைத் தொடர்ந்து காலை 10.35 மணியளவில் தீயணைப்புப்டையினரின் உதவியுடன் அந்த ஆடவர் கீழே இறக்கப்பட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


