Nov 5, 2025
Thisaigal NewsYouTube
ஆசியான் கண்காணிப்பில் தாய்லாந்து – கம்போடியா: விரைவில் நான்கு அம்சத் திட்டம் செயல்படுத்தப்படும்!
தற்போதைய செய்திகள்

ஆசியான் கண்காணிப்பில் தாய்லாந்து – கம்போடியா: விரைவில் நான்கு அம்சத் திட்டம் செயல்படுத்தப்படும்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.05-

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான அமைதித் திட்டத்தைக் கண்காணித்து, அது வெற்றியடைவதை உறுதிச் செய்வதில் ஆசியான் கண்காணிப்பாளர் குழு முக்கியப் பங்கு வகிக்கவுள்ளது.

கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் அக்குழுவானது அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டதாக மலேசிய ஆயுதப் படைகளின் தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ முகமட் நிஸாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.

ஆசியான் நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளைக் கொண்ட அக்குழுவானது, இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட நான்கு அம்சத் திட்டங்களை உறுதிச் செய்யும் பணியில் ஈடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனரக ஆயுதங்களை அதன் இடத்திற்கே திரும்பக் கொண்டு வருவது, கன்னி வெடிகளை அகற்றுவது, கம்போடியாவில் உள்ள மோசடி மையங்களை இடமாற்றம் செய்வது, மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட நான்கு அம்சத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் முகமட் நிஸாம் தெரிவித்துள்ளார்.

இந்த நான்கு அம்சத் திட்டங்களைச் செயல்படுத்திய பின்னரே, சிறை பிடிக்கப்பட்டுள்ள 18 கம்போடியர்களையும் தாய்லாந்து விடுவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News