Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பணியாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு / கதிர்வீச்சு பாதுகாப்பு விதி மீறல்கள் நடந்ததாக மருத்துவமனை மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பணியாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு / கதிர்வீச்சு பாதுகாப்பு விதி மீறல்கள் நடந்ததாக மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைச்சின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனை ஒன்றில் கதிர்வீச்சு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த அலட்சியம் காரணமாக மருத்துவ பணியாளர்கள் நீண்டகால நோய்களுக்கு உள்ளாகியுள்ளதாக சமூக செயல்பாட்டுக் குழு ஒன்று விசாரணை கோரியுள்ளது.

#ReformIPT என்ற அக்குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் அணுக்கதிர் மருத்துவ பிரிவில் உள்ள PET-CT ஸ்கேனர் கருவிகள் முறையாக நிறுவப்படாததால், பணியாளர்கள் நுரையீரல், இரத்தம் மற்றும் மார்பகப் புற்றுநோய்களுக்கு உள்ளானதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மருத்துவமனை நிர்வாகத்திலும் உயர் கல்வி அமைச்சகத்திலும் இருந்து பதில் வராததால், அந்த மருத்துவமனையின் பெயரை ஊடகங்கள் வெளியிடவில்லை.

இந்நிலையில், அந்த சமூக செயல்பாட்டுக் குழுவின் செயலாளர் பிரதிநிதி பிரெண்டன் கான் மற்றும் பௌசியா என அழைக்கப்படும் முன்னாள் பணியாளர் ஒருவர், கடுமையான தரநிலைக் செயல்முறைகள் மீறப்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த பிரச்சினையை மறைக்க தொழில்நுட்ப தரவுகள் மாற்றப்பட்டதாகவும், இது அணு ஆற்றல் உரிமம் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டுமென, லெம்பா பந்தாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சிலை அக்குழு அணுகி விளக்கமளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்