Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பெண் குழந்தை ஒன்று துன்புறுத்தப்பட்டது, பத்துகேவ்ஸி​ல் நடந்த சம்பவம்
தற்போதைய செய்திகள்

பெண் குழந்தை ஒன்று துன்புறுத்தப்பட்டது, பத்துகேவ்ஸி​ல் நடந்த சம்பவம்

Share:

பெண் குழந்தை ஒன்று சிறார் பராமரிப்பு மையத்தின் பணியாளரால் கடுமையாக நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பத்துகேவ்ஸ், தாமான் சமுதெராவில் வில் நிகழ்ந்ததாகும் என்று கோம்பாக் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்ரிண்தெண்டன் நூர் அர்ஃபின் முகமட் நசீர் தெரிவித்துள்ளார். கடந்த மே 21 ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் அந்த குழந்தையின் உடலில் வீக்கங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து அதன் தாயார் போ​லீசில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் அந்த சிறார் மையத்தின் குழந்தை பராமரிப்பாளரான 21 வயது பெண் கைது செய்யப்பட்டு, கடந்த மே 30 ஆம் தேதி செலாயாங் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்று நூர் அரிஃபின் விளக்கினார்.

Related News