கோலாலம்பூர், ஜூலை.13-
ஜிபிஐ - குளோபல் பீஸ் இண்டெக்ஸ் அதாவது உலக அமைதிக் குறியீடு 2025 அறிக்கையின்படி, மலேசியா 1.469 புள்ளிகளுடன் உலக அளவில் 13வது இடத்தையும், ஆசியான் நாடுகளில் சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது அமைதியான நாடாகவும் திகழ்கிறது. எனினும், கடந்த ஆண்டை விட ஓர் இடம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் 1.357 புள்ளிகளுடன் ஆசியானில் முதல் இடத்திலும், உலகளவில் 6வது இடத்திலும் உள்ளது. ஐஸ்லாந்து தொடர்ந்து 17வது ஆண்டாக உலகின் மிகவும் அமைதியான நாடாகத் திகழ்கிறது. Institute for Economics and Peace – ஐஇபி வெளியிடும் இந்த குறியீடு, சமூகப் பாதுகாப்பு நிலை, உள்நாட்டு- அனைத்துலக மோதல்கள், இராணுவமயமாக்கல் போன்ற காரணிகளின் அடிப்படையில் 163 நாடுகளை மதிப்பீடு செய்கிறது.








