Oct 3, 2026
Thisaigal NewsYouTube

இந்தியர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் திறனை வளர்த்துக் கொள்ள தேவையானவறற்றைச் செய்வேன்- இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்தியர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் திறனை வளர்த்துக் கொள்ள தேவையானவறற்றைச் செய்வேன்- இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

டாமான்சாரா நாடாளுமன்ற இந்தியர்களுக்காக இலக்கவியல் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கை இலக்கவியல் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.

டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியில், இந்திய சமூகத்தின் மத்தியில் மடானி செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு இன்று நடைபெற்றது.

மித்ராவின் நிதி ஆதரவோடு டாமான்சாரா நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் நடத்திய இந்தப் பயிலரங்கில் 16 வயதுக்கும் மேற்பட்ட 75 இந்தியர்கள் பயனடைந்தனர்.

இலக்கவியல் துறையில் உலகம் அதிவேகத்தில் முன்னேறிச் செல்லும் நிலையில், செயற்கை நுண்ணறிவு துறையில் நமது இந்தியர்கள் பின் தங்கிவிடாமல் இருக்க, இது போன்ற பயிலங்குகளை டாமான்சாரா உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ முன்னெடுத்து வருகிறார். அதோடு மடானி அரசாங்கத்தில், பிரதமரிடம் இதனை தாம் வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

தற்போதைய சூழலில், இலக்கவியல் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவுத் திறன் அனைவருக்கும் அவசியமானது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கவியல் தொழில்நுட்ப வளர்ச்சியானது அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியர்கள் தங்களது ஆற்றலை வளர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயம் என இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு பயிற்றுனர் டாக்டர் யோகேஸ்வரி இந்தப் பட்டறையைச் சிறப்பாக வழிநடத்தினார். இவரோடு இன்னும் சில இந்திய பயிற்றுனர்களைக் கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகளை டாமான்சாரா நாடாளுமன்றம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த முயற்சி வரும் காலங்களில் தொடரும் எனவும், ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கத் தாம் துணையிருப்பதாகவும் கோபிந்த் சிங் டியோ உறுதி கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →