Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வாருக்கு எதிராக வழக்கறிஞர் பி. வேதமூர்த்தி வழக்கு
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வாருக்கு எதிராக வழக்கறிஞர் பி. வேதமூர்த்தி வழக்கு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.12

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு எதிராக வழக்கறிஞர் பி. வேதமூர்த்தி சிவில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்ற அன்வாரின் நியமனம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படவில்லை என்பதால் அவரின் நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மலேசிய இந்தியர் முன்னேற்ற கட்சியின் தலைவருமான வேதமூர்த்தி கோரியுள்ளார்.

கார்த்திங் ஷான் என்ற வழக்கறிஞர் நிறுவனம் மூலமாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வேதமூர்த்தி இந்த வழக்கு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தமது வழக்கு மனுவில் ஒரே பிரதிவாதியாக அன்வாரின் பெயரை வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

Related News