Oct 17, 2026
Thisaigal NewsYouTube

இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது

அமெரிக்க, நவம்பர் 05-

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், துணை அதிபர் கமலா ஹரிசும், பென்சில்வனியா - மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தை நடத்தினர்.

குடியரசுக் கட்சி வேட்பாளரான 78 வயது டிரம்ப்புக்கும், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான 60 வயது ஹாரிசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இருவருமே தாம் மட்டுமே வெற்றிப்பெறப்போவதாக தங்களின் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் முழுங்கினர்.

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேர்தலுக்குப் பிறகு சில நாள்கள் கழித்தும் வெற்றியாளர் யார் என்பது தெரியாமல் போகலாம்.

எனினும், கடந்த 2020 ஆம் ஆண்டில் செய்ததைப்போல எந்தவித தோல்வியையும் எதிர்த்துப் போராடப் போவதாக டிரம்ப் மறைமுகமாகக் கூறியுள்ளார்.

சிறு வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி தீர்மானிக்கப்பட உள்ளதாகக் கருதப்படும் சூழலில், டொனால்ட் டிரம்போ, கமலா ஹாரிஸோ இரண்டு அல்லது மூன்று புள்ளிகளில் முன்னேறி வெற்றியை உறுதி செய்யலாம் என்று பார்க்கப்படுகிறது.

முக்கியமான மாநிலங்களில் வாக்காளர்களை ஈர்க்கவும், அவர்களுக்கு வாக்களிக்க ஊக்கம் தரவும், தாங்கள் வலுவான காரணங்களைக் கொண்டிருப்பதாக இரண்டு வேட்பாளர்களும் நம்புகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் 130 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக, தோல்வி அடைந்த அதிபர் வேட்பாளர் ஒருவர் மீண்டும் அதிபர் ஆவதற்குத் தேவையான வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து அமெரிக்க மக்கள் தீர்மானிக்கவிருக்கின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →