Aug 13, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் அன்று பெரும்பாலான இடங்களில் தெளிவான வானிலை நிலவும்!
தற்போதைய செய்திகள்

நெகிரி தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் அன்று பெரும்பாலான இடங்களில் தெளிவான வானிலை நிலவும்!

Share:

போர்ட்டிக்சன், ஜூலை.16-

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் வரும் சனிக்கிழமை அன்று, மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் தெளிவான வானிலை நிலவும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia கணித்துள்ளது.

போர்ட்டிக்சன் மற்றும் சிரம்பான் ஆகிய பகுதிகளைத் தவிர, ஜெலுபு, ஜெம்போல், கோலா பிலா, ரெம்பாவ் மற்றும் தம்பின் ஆகிய மாவட்டங்களில் காலையில் நல்ல வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், சனிக்கிழமை மாலை வேளையில் மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், அன்றைய தினம் வெப்பநிலை 23 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இந்த சனிக்கிழமையும், முன்கூட்டிய வாக்கெடுப்பு ஜூலை 28 ஆம் தேதியும், பொது வாக்கெடுப்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி